முகப்பு
இந்தியா

மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி: விமானப்படை வீரரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!   

தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா

மத நம்பிக்கைகளின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி: விமானப்படை வீரரின் மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!   

தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:55 PM
பகிர்:

புதுதில்லி: தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி கோரி இந்திய விமானப்படை வீரர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வருபவர் முகமது ஸுபைர். இவர் கடந்த 10.01.2005 அன்று தான் ஒரு இஸலாமியர் என்பதால் தன்னுடைய தனிப்பட்ட மத நம்பிக்கையின் அடிப்படையில் தாடி வளர்க்க அனுமதி வேண்டும் என்று கோரி தனது உயர் அதிகாரியிடம்    மனு கொடுத்தார். ஆனால் இவரது மனுவானது அடுத்த மாதமே உயர் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டது.

இந்திய விமானப்படையின் இந்த முடிவை எதிர்த்து ஸுபைர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இவருடன் மற்றொரு வீரரான அன்சாரி அப்தாப் அகமதுவும் தன்னை இணைத்துக் கொண்டார்.  இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் மற்றும் நீதிபதிகள் டி .ஒய் .சந்திரசூட்  மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வானது இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருந்தாவது:

இந்திய  விமானப்படையை பொறுத்த அளவில் தனிப்பட்ட தோற்றம் பற்றிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவை எந்த ஒரு மத நம்பிக்கைகளுக்கும் பாரபட்சம் காட்டும்படி அமைந்தது அல்ல. ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் அதனுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானதும் அல்ல.

படை வீரர்களிடையே ஒற்றுமை, ஒரு சீரான ஒழுங்கமைவு, ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை  உருவாக்குவதை மனதில் கொண்டே  இத்தகைய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு படையிலும் இத்தகைய விஷயங்கள் சகஜமானவைதான்.

இவ்வாறு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

முழு கட்டுரையைப் படிக்க →