புதுதில்லி: ஏர்செல்- மாக்சிஸ் வழக்கில், மாறன் சகோதர்கள் மீது குற்றசாட்டு பதிவு செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை ஜனவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏர்செல் நிறுவனத்திற்கு 2G லைசென்ஸ் தருவதற்காக, அந்நிறுவனத்தின் பங்குகளை மிரட்டி மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க வைத்ததாகவும், அதன் மூலம் தங்களுடைய குடும்ப நிறுவனமான சன் குழுமத்தில் மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய வழி வகுத்ததாகவும் கூறி, அன்றைய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது அண்ணனும், சன் குழும மேலாண்மை இயக்குநருமான கலாநிதிமாறன் ஆகிய இருவர் மீதும் சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிமன்றம், தீர்ப்பு வழங்குவதை அடுத்த மாதம் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.