சேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!
சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாசேவல் சண்டைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஆந்திரா மற்றும் தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவு!
சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்: சேவல் சண்டை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சேவல் சண்டை நடுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தி (பொங்கல்) விழா கொண்டாட்டத்தின் பொழுது, ஜனவரி-14 அன்று சேவல் சண்டை நடைபெறுவதாக புகார் தெரிவித்து, இந்திய விலங்குகள் நல வாரியம், மனித சமூகத்திற்கான இந்திய மற்றும் சர்வதேச அமைப்பு பீப்புள் பார் அனிமல்ஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளும் மனு தாக்கல் செய்திருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களுக்கான பொது உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வெளியிட்டது. அதன்படி சேவல் சண்டைக்கான தடையை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையானது சங்கராந்தி சமயத்தில்நடைபெறும் சேவைகள் சண்டைகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக சேவல் சண்டைகளை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த முறை சங்கராந்தி சமயத்தில் சேவல் சண்டைகள் எதுவும் நடத்தப்படாமல் கண்காணிக்குமாறு இரு மாநில அரசுகளுக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.