பழைய நோட்டுகளை வைத்திருந்தால் சிறை: அவசர சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு!
வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தணடனை மற்றும் அபராதம்...
புதுதில்லி: வரும் மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்கு பிறகு மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கையில் வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தணடனை மற்றும் அபராதம் விதிக்க அவசர சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-அம தேதி அன்று புழக்கத்தில் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.மேலும் மக்கள் தங்கள் கையில் உள்ள பழைய ருபாய் நோட்டுக்களை வரும் டிசம்பர் 31-அம தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இந்த காலக்கெடுவுக்குப் பிறகு தங்கள் பகுதியில் உள்ள ரிசர்வ் வங்கி கிளை அலுவலகங்களில் மார்ச்-31 ஆம் தேதி தகுந்த விளக்கம் அளித்து பழைய ரூபாய நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தற்போது இன்று காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, கொடுக்கப்பட்ட கால அவகாசமான் மார்ச் 31-ஆம் தேதிக்கு பிறகும் பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்களுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையும் அபராதமும் விதிப்பது என்றும், இதற்காக அவசரச் சட்டம் ஒன்றை நிறைவேற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.