பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்
நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்று வீடு திரும்பினார்.
நெஞ்சு வலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இன்று வீடு திரும்பினார்.
ஜனவரி 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரகாஷ் சிங் பாதல், பூரண நலம் பெற்றதால் அவர் வீடு திரும்பியதாக முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நெஞ்சில் சளி தொற்று ஏற்பட்டிருந்த பாதலை, முழுமையாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் குணமடைந்துவிட்டதாகவும், தொடர்ந்து பனியில் செல்வது, பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
Advertisement