முகப்பு
இந்தியா

தொடர் அமளி: இரண்டவாது நாளாக கேரள பேரவை ஒத்திவைப்பு

எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக கேரள சட்டப் பேரவையின் கூட்டம் இரண்டாவது நாளாக ஒத்திவைக்கப்பட்டது

Updated On : 10 பிப்ரவரி, 2016 at 3:51 PM
பகிர்:

எதிர்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக கேரள சட்டப் பேரவையின் கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

கேரள மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தின் போது, சூரிய மின் தகடு ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல்வர் உம்மன் சாண்டி பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒருவரை ஒருவர் மாற்றி குற்றம்சாட்டி கூக்குரலிட்டனர். இதையடுத்து சட்டப் பேரவைத் தலைவர் என். சக்தன், அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.

இந்நிலையில் இன்று கூட்டம் தொடங்கிய போது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைத் தலைவர் இருக்கைக்கு முன்பாக கூடி, கைகளில் பதாகைகளே ஏந்தி அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Advertisement

மதுபான கூடங்களுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த எதிர்க்கட்சிகள் அதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்றனர். மதுபான கூடம் குறித்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பேரவையில் விவாதிப்பதற்கு தலைவர் சக்தன் அனுமதி மறுத்தார். மேலும், அவர் காங்கிரஸ் உறுப்பினர் என்.முரளிதரனை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசுமாறு அழைத்தார்.

அப்போது எதிர்க்கட்சிகளின் கூச்சல் தொடர்ந்ததால், அவைத் தலைவர் பேரவையை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.