முகப்பு
இந்தியா

அருணாசல பிரதேசம்: புதிய அரசு அமைக்க உச்ச நீதிமன்றம் தடை

அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Updated On : 17 பிப்ரவரி, 2016 at 5:25 PM
பகிர்:

அரசியல் நெருக்கடி நிலவி வரும் அருணாசல பிரதேசத்தில் புதிய அரசு அமைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தனர். இதையடுத்து மாநிலத்தில் நிலவிய அரசியல் நெருக்கடியையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஆளுநர் பரிந்துரை செய்தார். மேலும், பாஜகவில் இணைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து காங்கிரஸிலிருந்து விலகிய உறுப்பினர்கள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளியாகின.

Advertisement

இதனிடையே இன்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவில், அருணாசல பிரதேசத்தில் தற்போதைய நிலையை தொடர வேண்டும் என்றும், காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணைக்குப் பின்னரே புதிய அரசு குறித்து முடிவு எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.