இந்தியா

நீர் மேலாண்மையே தற்போதைய தேவை: கர்நாடகாவில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் தற்போதைய தேவை நீர் மேலாண்மையே என்று கர்நாடக மாநிலம் பெல்காவியில் இன்று விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

PTI

நாட்டின் தற்போதைய தேவை நீர் மேலாண்மையே என்று கர்நாடக மாநிலம் பெல்காவியில் இன்று விவசாயிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பயிர் காப்பீட்டுத் திட்டமான பசல் பீம யோஜனா திட்டம் மத்திய அரசால் மீண்டும் துவக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதன் அடையாளமாக கர்நாடக மாநிலம் பெலகாவியில் இன்று விவசாயிகள் பங்கேற்ற விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் விவசாயம், உற்பத்தித் துறை வளர்ச்சி அடைந்தால், எந்த பிரச்னையையும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

உலகமே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் போது இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமே உயர்வில் உள்ளது. தற்போது இந்தியா மட்டுமே நம்பிக்கையுள்ள நாடாக இருப்பதாக உலக நாடுகள் கூறுகின்றன.

இந்தியாவுக்கு நீர் மேலாண்மையே தற்போதைய தேவையாக உள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 32 பேருக்கு ரூ.3.5 கோடி கல்விக் கடன் -ஆட்சியா் இரா.சுகுமாா் வழங்கினாா்

பாசனக் கால்வாய் அமைத்துத் தரக் கோரிக்கை

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

முத்தண்ணன் குளக்கரை டா்ப் மைதானத்தை தனியாா் வசம் ஒப்படைக்கக் கூடாது

இதய தசை நோய் குறித்த பயிலரங்கு

SCROLL FOR NEXT