முகப்பு
இந்தியா

மகாராட்டிராவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் ரத்து

மகாராஷ்டிரா மாநிலம் தஹானு மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Updated On : 4 ஜூலை, 2016 at 11:18 AM
பகிர்:

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் தஹானு மாவட்டத்தில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இன்று காலை தஹானு மாவட்டத்தில், ஏற்பட்ட இந்த விபத்தில் சரக்கு ரயிலில் உள்ள 11 பெட்டிகள் தடம் புரண்டது.  இதனையடுத்து, நீண்ட தூரம் ரயில் சேவைகள் அனைத்தையும் மேற்கத்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.

12009 மும்பை சென்ரல் - அகமதாபாத் எக்ஸ்பிரஸ், 19011 மும்பை அகமதாபாத் எக்ஸ்பிரஸ், 19215 சௌராஷ்ட்ரா எக்ஸ்பிரஸ் மற்றும் 09021 பந்த்ரா ஜம்மு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களை தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

அப்பகுதியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.