கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்தனர்
ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.
புது தில்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றம் காரணமாக கூடுதலாக 800 சிஆர்பிஎஃப் படையினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.
மாநிலத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையில், பாதுகாப்புப் பணியை மேற்கொள்ள காவல்துறைக்கு துணையாக ஏற்கனவே 1,200 சிஆர்பிஎஃப் படையினர் சனிக்கிழமை காஷ்மீர் சென்றிருக்கின்றனர்.
எனினும் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுக்குள் கொண்டு வர இன்று 8 கம்பெனி படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த வாரம் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர். 250 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.