தில்லியில் சிறுநீரக மோசடி: மூத்த மருத்துவர்கள் இருவரிடம் விசாரணை
தில்லியில் நடந்த சிறுநீரக மோசடி சம்பவத்தில் அப்போல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது தில்லி: தில்லியில் நடந்த சிறுநீரக மோசடி சம்பவத்தில் அப்போல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் இருவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுநீரக மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்பு, மூத்த மருத்துவர்கள் அசோக் சரின் மற்றும் டி.கே. அகர்வால் ஆகியோர் நேரில் ஆஜராகி, காவல்துறையினரின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
மேலும், அதே மருத்துவமனையில் பணியாற்றும் 3 மூத்த மருத்துவர்களையும் விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
சிறுநீரகத் திருட்டு குறித்து புது தில்லி காவல்துறை 2 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்து, மருத்துவரின் உதவியாளர், தரகர், முக்கியக் குற்றவாளி ராஜ்குமார் ராவ், சிறுநீரகத்தை தானம் அளித்தவர்கள் மற்றும் சிறுநீரகத்தை பெற்றவர் என 13 பேரை கைது செய்துள்ளது.