முகப்பு
இந்தியா

உத்தரகாண்ட் மாநிலத்துக்கு கன மழை எச்சரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த 2 நாட்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 15 ஜூலை, 2016 at 4:23 PM
பகிர்:

டேஹ்ராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த 2 நாட்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மைச் செயலாளர் ஷத்ருகன் சின்கா, மாவட்ட நீதிபதிகளுக்கு பிறப்பித்துள்ள ஆலோசனையில், மாவட்டங்களின் நிலைமையை ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியுள்ளார்.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜூலை 16 மற்றும் 17ம் தேதிகளில் கன மழை பெய்யும் என்றும், உத்தரகாசி, சாமோலி, ருத்ரபிரயாக் உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.