முகப்பு
இந்தியா

அருணாச்சல்: காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து நபம் துகி ராஜினாமா

அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை நபம் துகி ராஜினாமா செய்துள்ளார்.

Updated On : 16 ஜூலை, 2016 at 1:16 PM
பகிர்:

அருணாச்சலப் பிரதேச காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் பதவியை நபம் துகி ராஜினாமா செய்துள்ளார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அம்மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை முதல்வர் நபம் துகிக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருக்கும் நபம் துகிக்கு பீமா கண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

Advertisement

இதனால், நபம் துகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். எனவே, பீமா கண்டு, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு எதிராக இருந்த கலிகோ புல் உட்பட 44 எம்எல்ஏக்களும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து, அருணாச்சல சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்தால், அம்மாநில புதிய முதல்வராக பீமா கண்டு பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.