முகப்பு
இந்தியா

கங்கை நதியை மாசுபடுத்துபவர்களுக்கு சிறை தண்டனை: வருகிறது புதிய சட்டம்

கங்கை நதியை மாசுபடுத்துபவர்களுக்கு சிறை தணடனை வழங்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ராஜ்யசபாவில் அறிவித்தார்

Updated On : 18 ஜூலை, 2016 at 3:14 PM
பகிர்:

கங்கை நதியை மாசுபடுத்துபவர்களுக்கு சிறை தணடனை   வழங்க புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ராஜ்யசபாவில் அறிவித்தார்.

ராஜ்யசபாவில் கங்கை நதியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு தணடனை வழங்கப்படுமா என்ற    கேள்விக்கு பதிலளித்து பேசும் பொழுது அவர் கூறியதாவது:

கங்கை நதிக்கரையில் 764 தொழிற்சாலைகள்  இயங்கி வருகின்றன. அவையனைத்தும் கங்கை நதியை மாசுபபடுத்தி வருகின்றன. அவற்றில் சிலவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. மீதமுள்ள தொழிற்சாலைகள் மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநில அரசுகளை கலந்தாலோசித்து இது தொடர்பாக விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

Advertisement

ஒரு சிறிய பீடி திருடினால் கூட ஏழை மக்கள் சிறையில் தள்ளப்படுகின்றனர். ஆனால் கங்கையை மாசுபடுத்துவோர் சிறைக்கு அனுப்பப்படுவதில்லை.

புனிதமான நதி என்று கூறப்படும் கங்கை நதி நீரை தற்பொழுது ஆய்வகத்தில்பரிசோதனை செய்து பார்த்தால் அதில் உள்ள வேதிப்பொருட்களின் அளவு காரணமாக அது சுத்தமான நீராக இருப்பதில்லை.  

இவ்வாறு உமா பாரதி பதில் அளித்துப் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.