காஷ்மீர் வன்முறை: காயமடைந்த இளைஞர் பலி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு
காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியான சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
காஷ்மீர் எல்லைப் பகுதி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட 10 மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 8ம் தேதி ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து காஷ்மீரில் கலவரம் வெடித்தது.
Advertisement
தொடர்ந்து இரண்டு வாரங்களாக வன்முறைச் சம்பவங்களால் காஷ்மீர் மாநிலத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று மாநிலம் முழுவதும் எங்கும் வன்முறைச் சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது அந்த மாநிலத்தில் அமைதி திரும்பி வந்தாலும், தொடர்ந்து 14வது நாளாக செல்போன் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது.