முகப்பு
இந்தியா

பாலிவுட் பாடகர் முக்கேஷ் சந்த் 93-வது பிறந்தநாள்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது கூகுள்

பிரபல பாலிவுட் பின்னணிப் பாடகர் முக்கேஷ் சந்த் மத்தூரின் 93-வது பிறந்தநாளான இன்று  கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

Updated On : 22 ஜூலை, 2016 at 12:25 PM
பகிர்:

மும்பை: பிரபல பாலிவுட் பின்னணிப் பாடகர் முக்கேஷ் சந்த் மத்தூரின் 93-வது பிறந்தநாளான இன்று  கூகுள் டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இவர், தில்லியில் ஜூலை 22, 1923-ல்  ஜோராவார் சந்த் மத்தூர் மற்றும் சந்த் ராணி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது குடும்பத்தில் பிறந்த பத்து குழந்தைகளில் முகேஷ் ஆறாவது குழந்தையாவார்.

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ் கபூருக்கு பின்னணிப் பாடகராக பாடலைப் பாடியதற்காக முகேஷ் புகழ்பெற்றார்.

Advertisement

மேலும், 1974 - ரஜ்னிகாந்தா திரைப்படப் பாடலான "கெயின் பார் யோன் பீ தேக்ஹா" என்ற பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது.

27 ஆகஸ்ட் 1976 அன்று, அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள டெட்ரோய்ட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சென்ற போது முக்கேஷ் மாரடைப்பால் இறந்தார்.

இவரின் பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக கூகுள் - டூடுல் ஒன்றை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.