முகப்பு
இந்தியா

ஆந்திரா சிறப்பு ஆந்தஸ்து விவகாரம்: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ஆந்தஸ்து கோரி ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூலை, 2016 at 4:06 PM
பகிர்:

புது தில்லி: ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்குச் சிறப்பு ஆந்தஸ்து கோரி ஏற்பட்ட பிரச்னை காரணமாக மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இன்று காலை ஆந்திரப் பிரதேசம் சிறப்பு அந்தஸ்து மசோதா குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அவையில் அமளி ஏற்பட்டதன் காரணமாக, அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து மசோதா விவாதிக்கும் வரை வணிகத்திற்கு அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். இதையடுத்து அவையில் தொடர் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.