முகப்பு
இந்தியா

கர்நாடகாவில் தனியார் பேருந்தில் பயங்கர தீ: 3 பயணிகள் பலி

கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

Updated On : 27 ஜூலை, 2016 at 1:20 PM
பகிர்:

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹப்பள்ளி நகரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் திடீரென தீப்பற்றியதில் அதில் பயணம் செய்த 3 பயணிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

பெங்களூருவில் இருந்து 420 கி.மீ. தொலைவில் உள்ள ஹப்பள்ளி நகரில், தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட தனியார் பேருந்தில், திடீரென தீப்பற்றியது.

தார்வாதில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் நடத்துனர், ஓட்டுநர் மட்டுமின்றி 15 பயணிகள் இருந்தனர். இவர்களில் 3 பேர் தீயில் சிக்கி பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.