இந்தியா

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

தினமணி

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.42-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.01-ம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62-இல் இருந்து 60.45-ஆகக் குறைந்துள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.55.82-இல் இருந்து 53.73 ஆக குறைந்துள்ளது. உள்ளூர் வரிகளுக்கு ஏற்ப இந்த விலையில் சிறிய மாற்றம் இருக்கும்.

பெட்ரோல், டீசலின் விலை இப்போது தொடர்ந்து 3-ஆவது முறையாக இப்போது குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றி வருகின்றன. இதன்படி சமீபகாலமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதன் அடிப்படையில் உள்நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அளவில் பெட்ரோல், டீசலின் உற்பத்தி விலை, அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய் மாற்று விகிதம் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றத்தால் கிடைத்த பலன்களை நுகர்வோருக்கு அளிக்கும் விதமாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் தொடர்ந்து சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆன்லான் ஹெல்த்கேர் பங்குகள் 1% உயர்வு!

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் கைது! வெடிகுண்டுகள் பறிமுதல்!

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி: பிரதமருக்கு கோரிக்கை

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிக்கும் புதிய படம்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT