தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை இன்று வெளியிட்டார் பிரதமர் மோடி
இந்தியாவின் முதல் தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
புது தில்லி: இந்தியாவின் முதல் தேசியப் பேரிடர் மேலாண்மை திட்ட புத்தகத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.
இந்தியாவில் ஏற்படும் பேரழிவுகளை சரி செய்வதற்கும், உயிரிழப்பு மற்றும் பொருட் சேதத்தை குறைப்பதே தேசிய பேரிடர் மேலாண்மை திட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ உடனிருந்தனர். மேலும், பிரதமர் அலுவலக மற்றும் பாதுகாப்புத் துறை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Advertisement