முகப்பு
இந்தியா

குல்பர்க் சொசைட்டி வழக்கு: 24 பேர் குற்றவாளிகள், 36 பேர் விடுதலை

குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 2 ஜூன், 2016 at 1:19 PM
பகிர்:

புது தில்லி: குஜராத் மாநிலம், குல்பர்க் சொசைட்டி வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்றும், இவ்வழக்கிலிருந்து 36 பேரை விடுதலை செய்தும் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் குல்பர்க் சொசைட்டி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்ட  வழக்கில் 24 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமனறம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி அதுல் வைத்தியா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 36 பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டடோரில் பாரதிய ஜனதா கவுன்சிலர் பிபின் பட்டேலும் ஒருவர். குல்பர்க் படுகொலை வழக்கு குற்றவாளிகளுக்கு வரும் 6-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement

முன்னதாக கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிக்கப்பட்டது. இதில் 59 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் அடுத்த நாள் அகமதாபாத் சமன்பூராவில் உள்ள குல்பர்க் சொசைட்டியில் ஆயிரக்கணக்கானோர் அடங்கிய கும்பல் ஒன்று புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. இதில் பலர் எரித்தும், கொடூர ஆயுதங்களால் தாக்கியும் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் எம்.பி., இசன் ஹாப்ரி என்பவரும் உயிரிழந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.