முகப்பு
இந்தியா

பண மோசடி செய்ததாக சோனியா மீது கேரளாவில் வழக்குப் பதிவு

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூன், 2016 at 12:32 PM
பகிர்:

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் ரமேஷ் சென்னிதலா, உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் என்ற கல்வி நிறுவனம் கேரள காங்கிரஸ் கட்சி சார்பில் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை கட்டுவதற்கான ஒப்பந்தம் ஹீபர் என்ற நிறவனத்துக்கு அளிக்கப்பட்டது.

Advertisement

கல்வி நிறுவனத்துக்கான கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், அதற்குரிய பணத்தை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் என்பவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், சோனியா காந்தி, ராஜீவ் காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள காங்கிரஸ் தவைலர் வி.எம். சுதீரன் உள்ளிட்டோர் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.