தில்லியில் பெண் வழக்கறிஞருக்கு கத்திக்குத்து: கணவர் தலைமறைவு
தில்லியில் பெண் வழக்கறிஞரை கத்தியால் குத்திய சம்பவத்தில் அவரது கணவர் தலைமறைவாக உள்ளார்.
தில்லியில் பெண் வழக்கறிஞரை கத்தியால் குத்திய சம்பவத்தில் அவரது கணவர் தலைமறைவாக உள்ளார்.
வடகிழக்கு தில்லியின் சோனியா விஹார் பகுதியில் 38 வயதான மூத்த பெண் வழக்கறிஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் அவரது கணவர் என போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவர் தலைமறைவாக உள்ளார் என்று அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சோனியா விஹாரில் புதன்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைத்ததும், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த நிலையில் இருந்த அப்பெண்ணைக் கண்டனர். உடனே அவர் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஜிடிபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து அவர் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று போலீஸார் தெரிவித்தனர். கஜூரி காஸ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் கணவருக்கு இந்தத் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது தலைமறைவாகவிருக்கும் அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
A 38-year-old senior advocate woman was allegedly stabbed in northeast Delhi's Sonia Vihar area, with police identifying her husband as the accused, who is currently absconding, an official said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.