மும்பையில் அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 2 பேர் பலி
தெற்கு மும்பையின் மட்டுங்கா பகுதியில் 5 அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
மும்பை: தெற்கு மும்பையின் மட்டுங்கா பகுதியில் 5 அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியாகினர்.
மட்டுங்கா ரயில் நிலையம் அருகே உள்ள பந்தார்கர் சாலையில் இருந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் ஒரு பகுதி நேற்றிரவு இடிந்து விழுந்தது.
பலியான இரண்டு பேரும், சாலையோரம் நடந்து சென்றவர்கள் என்பதால் அவர்களது அடையாளம் தெரியவரவில்லை என்றும், இடிந்து விழுந்த கட்டடம் 70 ஆண்டுகள் பழமையானது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
இந்த கட்டடத்தில் விடுதி, பயிற்சி மையம், வங்கி மற்றும் ஏராளமான கடைகளும், கட்டடத்தின் மாடியில் இரண்டு செல்போன் கோபுரங்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.