ராணுவ சீருடைகள் கண்டெடுப்பு: வைஷ்ணோ தேவி கோயிலுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மாதா வைஷ்ணோ தேவி கோயிலின் மலையடிவார நகரான காட்ராவில், இரண்டு ராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு: மாதா வைஷ்ணோ தேவி கோயிலின் மலையடிவார நகரான காட்ராவில், இரண்டு ராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படையினர் இன்று மேற்கொண்ட வழக்கமான ரோந்து பணியின்போது, ஜம்மு மாவட்டத்தின் கட்ரா நகருக்கு அருகே ஜஜ்ஜார் கோட்லி பகுதியில் உள்ள மேம்பாலத்துக்குக் கீழே இரண்டு ராணுவ சீருடைகள் மற்றும் காலணிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, கட்ரா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
இது குறித்து பேசிய பாதுகாப்புப் படை அதிகாரி, கட்ரா முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரை சந்தேகத்துக்கு இடமான வேறு எந்த சம்பவங்களும் நடைபெறவில்லை. தற்போது வரை நகரத்தில் அமைதியான சூழலே நிலவுகிறது என்று கூறியுள்ளார்.