முகப்பு
இந்தியா

தில்லியில் யோகா செய்து அசத்திய மாற்றுத்திறனாளி மாணவர்கள்

தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் யோகா செய்து அசத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Updated On : 21 ஜூன், 2016 at 12:47 PM
பகிர்:

புது தில்லி: தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் யோகா செய்து அசத்திய காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சர்வதேச யோகா தினமான இன்று நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சி பல்வேறு மாநிலங்களில் பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தில்லியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து பல்வேறு யோகாவை செய்து அசத்தினர்.

சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில் வீல்சேர் மூலமும், ஊன்றுக்கோல் மூலமும் பல்வேறு ஆசானங்களை செய்துக் காட்டி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.

Advertisement

சர்வதேச யோகா தினத்தை பல்வேறு மாநிலங்களில் சாதி, மதம் பாராமல் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி திரண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் அலுவலக ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். மத்திய அமைச்சர்கள் பலர் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.