முகப்பு
இந்தியா

சிறப்பு அதிகாரச் சட்டம்: மீண்டும் உண்ணாவிரதம் தொடங்கினார் ஷர்மிளா

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) நீக்க வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் ஐராம் ஷர்மிளா சனு இன்று முதல் மீண்டும் தனது உண்ணாவிரப் போராட்டத்தை தொடங்கினார்.

Updated On : 1 மார்ச், 2016 at 3:51 PM
பகிர்:

மணிப்பூர் மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை (ஏஎஃப்எஸ்பிஏ) நீக்க வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் ஐராம் ஷர்மிளா சனு இன்று முதல் மீண்டும் தனது உண்ணாவிரப் போராட்டத்தை தொடங்கினார்.

ராணுவத்தினருக்கு அதிக அதிகாரங்களை அளிக்கும் சிறப்பு சட்டத்தை நீக்கக் கோரி கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் ஷர்மிளா சனு.

ஒவ்வொரு ஆண்டும் சிறையில் இருந்து விடுதலை ஆகும் ஷர்மிளா மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கும் போது  மீண்டும் கைது செய்யப்படுவார். இந்நிலையில், கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஷர்மிளா நேற்று விடுதலை ஆனார்.

Advertisement

இந்நிலையில் இன்று மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார் ஷர்மிளா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.