இந்தியா

ஆந்திர அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்:ஜெகன் மோகன் கட்சி நோட்டீஸ்

ஆந்திர அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை செயலாளரிடம் வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தது.

தினமணி

ஆந்திர அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவை செயலாளரிடம் வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தது.

இருப்பினும், வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்கள் சட்டப்பேரவைக்கு விடுமுறை என்பதால் இந்தத் தீர்மானம் குறித்து அடுத்த வாரம் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

ஆந்திர அரசு ஊழலில் ஊறித் திளைப்பதாகவும், அரசு மீது மக்கள் அனைத்து வகையிலும் நம்பிக்கையை இழந்துவிட்டனர் என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையே, பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 37 பேர் ஒரு நாள் மட்டும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சூழலில், ஆந்திர அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின் தடை

‘மனிதாபிமானம் பற்றி விடியோவை பாா்த்துவிட்டு பேசுவோம்’ - தெருநாய் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் காட்டம்

ஐஎஸ்பிஎல் சீசன் 3 மொத்த பரிசுத் தொகை ரூ.6 கோடி

பழம் கேட்டு வாங்கி சாப்பிட்ட பெருமாள்!

ரூ.28.71 லட்சத்தில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

SCROLL FOR NEXT