இந்தியா

மேகாலயத்தில் மிதமான நிலநடுக்கம்

மேகாலய மாநிலத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிற்பகல் 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3-ஆகப் பதிவானது.

தினமணி

மேகாலய மாநிலத்தில் வியாழக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேகாலயத் தலைநகர் ஷில்லாங்கின் சுற்றுப்புறப் பகுதிகளில் பிற்பகல் 3.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 8 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3-ஆகப் பதிவானது.

பின்னர் 3.21 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.2-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் நான்கு நிமிடங்களுக்கு நீடித்தது. இது, 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என மேகாலய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT