இந்தியா

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதக் கூடாது: சசி தரூர் தீர்மானம் தோல்வி

ஓரினச்சேர்க்கையை யில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீண்டும் தோல்வியடைந்தது

PTI

ஓரினச்சேர்க்கையை யில் ஈடுபடுவதை குற்றமாகக் கருதக்கூடாது என்று கூறி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கொண்டு வந்த தனிநபர் மசோதா மீண்டும் தோல்வியடைந்தது.

ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, அதற்கு மாற்றாக மற்றொரு பிரிவு உருவாக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், மக்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அப்போது அவையில் இருந்த 73 உறுப்பினர்களில் 58 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 14 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். ஒருவர் நடுநிலை வகித்தார். இதையடுத்து அந்த மசோதா தோல்வியடைந்தது.

இதே விஷயத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி சசி தரூர் மக்களவையில் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் ஆரம்ப நிலையிலேயே தோல்வியடைந்தது.

இந்திய தண்டனையியல் சட்டத்தின் 377-ஆவது பிரிவை நீக்குவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்றும், இந்தப் பிரிவானது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் கடந்த 2009-ஆம் ஆண்டு, தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு ரத்து செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

ஆறுமுகனேரியில் தெருமுனைப் பிரசாரம்

பாதுகாப்பும் பயணமும்...

திருப்பதி லட்டு விவகாரம்: சுப்பிரமணியன் சுவாமி மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT