சத்தீஸ்கரில் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு: பெரும் விபத்து தவிர்ப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில், கமலூர் அருகே இன்று காலை 7.40 ரயில் தடம் புரண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் மாநிலத்தில், கமலூர் அருகே இன்று காலை 7.40-க்கு ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தன்டேவாடா மாவட்டத்தின் கமலூர் அருகே கிரன்டுல்-விசாகப்பட்டினத்தை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இன்ஜின் தண்டவாளத்தை விட்டு விலகி சென்றதால் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தன்டேவாடா காவல்துறை கண்காணிப்பாளர் கம்ளோசன் கூறியுள்ளார்.
Advertisement
இச்சம்பவம் நக்சலைட்களின் நாசவேலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.