முகப்பு
இந்தியா

ஹரியானா மாநிலத்தில் கபடி வீரர் சுட்டுக் கொலை (வீடியோ இணைப்பு)

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி முடித்து வீடு திரும்பிய கபடி வீரரை ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.

Updated On : 16 மார்ச், 2016 at 4:35 PM
பகிர்:

ஹரியானா மாநிலத்தில் பயிற்சி முடித்து வீடு திரும்பிய கபடி வீரரை ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தனர்.

இந்த காட்சி அங்கிருந்த ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வேகமாக இந்த வீடியோ பரவி வருகிறது.

தேசிய அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தவர் ஹரியானா மாநிலம் ரோத்டாக் பகுதியைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் (24).

Advertisement

நேற்று மாலை பயிற்சி முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார் சுக்விந்தர் சிங். அலைபேசியில் பேசிக் கொண்டு வந்த அவரை, ஸ்கூட்டரில் வந்த இருவர் சரமாரியாக சுட்டனர்.

ஸ்கூட்டரில் பின் இருக்கையில் வந்த நபர் முதலில் சுக்விந்தர் சிங்கின் மார்பில் சுட்டார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்தார் சுக்விந்தர் சிங். பின்னர் கீழே இறங்கி வந்த அவர்,  சுக்விந்தர் முன்னெற்றியில் துப்பாக்கியை வெகு அருகில் வைத்து சுட்டார். இதையடுத்து ஸ்கூட்டரை ஒட்டி வந்த நபரும், இறங்கிவந்து தனது பங்குக்கு சுட்டார்.

இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த கொலை குறித்து போலீஸார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

</p><p align="justify"> </p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.