முகப்பு
இந்தியா

உத்தரகண்டில் மே 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு: உச்ச நீதிமன்றம்

உத்தரகண்ட் சட்டப்பேரவையில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 6 மே, 2016 at 3:35 PM
பகிர்:

புது தில்லி :  உத்தரகண்ட் சட்டப்பேரவையில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் கோரும் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 9 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பங்கேற்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உத்தரகண்டில் ஹரீஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில், திடீரென அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உத்தரகண்ட் உயர் நீதிமன்றம், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உத்தரவிட்டது.

Advertisement

இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

இந்த நிலையில், மே 10ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.