முகப்பு
இந்தியா

சமாஜ்வாதி கட்சியில் மீண்டும் அமர் சிங்: மாநிலங்களவை உறுப்பினராக நியமனம்

சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர் சிங் மீண்டும் அக்கட்சியில் இணைகிறார். சமாஜ்வாதி கட்சி இன்று வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பெயர் பரிந்துரைப் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

Updated On : 17 மே, 2016 at 6:07 PM
பகிர்:

லக்னோ: சமாஜ்வாதி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அமர் சிங் மீண்டும் அக்கட்சியில் இணைகிறார். சமாஜ்வாதி கட்சி இன்று வெளியிட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பெயர் பரிந்துரைப் பட்டியலில் அவரது பெயரும் இடம்பெற்றுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரான முலயாம் சிங்கின் நெருங்கிய நண்பராக இருந்த அமர் சிங் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதையடுத்து தனிக் கட்சி தொடங்கிய அமர் சிங், கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற உத்ர பிரதசே சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தார்.

Advertisement

பின்னர் ராஷ்டீரிய லோக் தளம் கட்சியில் இணைந்து 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

முலயாம் சிங்க்கும், அமர் சிங்க்கும் இடையே பிணக்குகள் தீர்ந்ததையடுத்து, அமர் சிங்கை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்ர பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்படும் பெயர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் அமர் சிங் பெயரும் இடம்பெற்றுள்ளது. அமர் சிங் தவிர, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்த பேனி பிரசாத் வர்மா உள்ளிட்ட 5 பேர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.