உ.பி.: மாணவனைத் தாக்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் கைது
உத்தரப் பிரதேசத்தில் மாணவனைத் தாக்கியதாக பள்ளித் தலைமை ஆசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மாணவனைத் தாக்கியதாக பள்ளித் தலைமை ஆசியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூரில் உள்ள ஹெலா கிராமத்தில் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் ஒன்றாம் வகுப்பு மாணவனை பள்ளித் தலைமை ஆசிரியர் வெள்ளிக்கிழமை தடியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை காவல் நிலையித்தில் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து பள்ளித் தலைமை ஆசியரை போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிவன்ஷ்க்கும் அவனது வகுப்புத் தோழன் சௌரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
Advertisement
Advertisement
வாக்குவாதம் முற்றியதால், சௌரப் தனது தாயைப் பள்ளிக்கு அழைத்தான். அவரது புகாரின் அடிப்படையில், தலைமை ஆசிரியர் தன்னை தடியால் தாக்கியதாக சிவன்ஷ் தெரிவித்துள்ளான். சிவன்ஷின் தந்தை விகாஸ் சர்மா லக்னௌவில் வசித்து வருகிறார்.
கல்விக்காக சிவன்ஷ் தற்போது டிக்காரியா கிராமத்தில் உள்ள தாத்தா, பாட்டியுடன் வசித்து வருகிறான்.
Police arrested a primary school headmaster on Saturday for allegedly beating a Class 1 student with a stick.