இந்தியா

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் உரிய முடிவு: பிரகாஷ் ஜவடேகர் பேச்சு!

DIN

கோயம்புத்தூர்: புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி விரைவில்  உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

கோவையில் அமைந்துள்ள ஈஷா வித்யா குழும பள்ளிகளின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடும் விதமாக ‘ஈஷா வித்யா தேசிய கல்வி மாநாடு’ கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியதாவது:

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது கொண்டுவரப்பட்ட கல்வி முறையையே  நாம் இன்னும் பின்பற்றி வருகிறோம். அது 'கேள்வி- பதில்' என்ற முறையிலேயே அமைந்துள்ளது. அதனால் தற்போதைய சூழலுக்கு  ஏற்ப கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளிலும் சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டியது அவசியம். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், தங்களது குழந்தைகளை நல்ல பள்ளியில் சேர்த்து, தரமான கல்வி கிடைக்க செய்ய வேண்டும் என கருதுகின்றனர்.

மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதன் பொருட்டு மத்திய அரசின் பள்ளிகளில் தேர்வு முறையை ரத்து செய்து விட்டோம். கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு கோட்பாடுகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி உரிய முடிவு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து நிறுத்தங்களை சீரமைக்க கோரிக்கை

அரியலூரில் மகிளா காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

கொலைக்கு நண்பரே உடந்தை

யூக்கோ வங்கி வருவாய் ரூ.6,945-ஆக அதிகரிப்பு

படைப்பாளிகள் தொடா்ந்து எழுதுவதற்கான ஊக்கம்தான் விருதுகள்

SCROLL FOR NEXT