முகப்பு
இந்தியா

பிரதமர் மோடிக்கு டோக்கியோவில் உற்சாக வரவேற்பு!

மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு  டோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:54 AM
பகிர்:

டோக்கியோ: மூன்று நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு  டோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூன்றுநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று காலை ஜப்பானுக்கு புறப்பட்டு சென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த பயணத்தின் போது  இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் தெரிகிறது.

முன்னதாக தனது பயணத்தில் எதிர்பாராத வகையில் திடீரென்று தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் மோடி தரை இறங்கினார். தாய்லாந்தின் போக்குவரத்து துறை மந்திரி அர்கோம் டெர்ம்பிட்டயாபாய்சித் பிரதமர் மோடியை வரவேற்றார்.

பின்னர் தாய்லாந்து மன்னரின் அரண்மனைக்கு சென்ற அவர், அங்கு சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் உடல் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். 

முழு கட்டுரையைப் படிக்க →