முகப்பு
இந்தியா

பேடிஎம் நிறுவன விளம்பரத்தில் மோடி இடம்பெறுவது வெட்கக்கேடு : கெஜ்ரிவால் கடும் தாக்கு!

இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபடும் தனியார் நிறுவனமான பேடிஎம் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் பயன்படுத்தப்படுவது முற்றிலும் வெட்கக்கேடானது... 

Updated On : 10 நவம்பர், 2016 at 4:54 PM
பகிர்:

புதுதில்லி : இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபடும் தனியார் நிறுவனமான பேடிஎம் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் பயன்படுத்தப்படுவது முற்றிலும் வெட்கக்கேடானது என தில்லி முதலவர் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேடிஎம் என்பது இணைய வழி பண பரிமாற்ற சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனமானமாகும். இந்த நிறுவனத்தின் விளம்பரம்  ஒன்று இன்று தேசிய நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. இதில் பிரதமர் மோடியின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

இதற்கு தில்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்துக்களாவது:

Advertisement

முற்றிலும் வெட்கக்கேடு. நாட்டின் பிரதமர் தனியார் நிறுவன விளம்பரங்களுக்கு மாடலாக செய்லபடுவதை மக்கள் விரும்புவார்களா? நாளை இந்த நிறுவனங்கள் தவறான செயல்களில் ஈடுபடுமானால் அவர்களுக்கு எதிராக யார் நடவடிக்கை எடுப்பது?

அதிக மதிப்பு உள்ள ருபாய் நோட்டுகள் செல்லாது என்று முதல்நாள் அறிவிப்பு வெளியாகிறது.பிரதமரின் இந்த அறிவிப்பினால் பெரும்பயன் பெற உள்ள பேடிஎம் நிறுவனத்தின் விளம்பரத்தில் பிரதமர் இடம்பெறுகிறார். என்ன நடக்கிறது?

இவ்வாறு கேஜரிவால் தனது டிவிட்டர்  பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.