இந்தியா

கங்கை நதி நீரில் மிதந்து வந்த கரன்சி நோட்டுக்கள்!

லக்னோ அருகே ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கங்கை நதி நீரில் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

DIN

லக்னோ: லக்னோ அருகே ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கங்கை நதி நீரில் மிதந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

உத்தரபிரதேச மாநில லக்னோ அருகே அமைந்துள்ளது மிர்சாபூர். இங்குள்ள நர்கட் என்னும் பகுதியில் இன்று காலை  கங்கை நதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் நீரில் மிதந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.   அவர்கள் உடனடியாக அருகில் உள்ள கோட்வாலி  காவல் நிலையத்திற்கு தகவல் தந்தனர்.

உடனடியாக காவல் துறையினர் அங்கு விரைந்தனர். அங்குள்ள மக்களிடம் விசாரித்த அவர்கள் சரியாக எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் நீரில் வந்தன என்ற விபரம்  தெரியவில்லை என்று தெரிவித்தனர். தற்பொழுது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதேபோல் ரேபரேலி அருகே நேற்று ஒரு சாக்கு மூட்டை நிறைய எரிந்த நிலையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள்  கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT