இந்தியா

கருப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமானியர்களும் பங்கேற்க வேண்டும்: மோடி ஆவேச உரை

கருப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமானியர்களும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

PTI

பதின்டா: கருப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமானியர்களும் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டால் தான் எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளைக் கொண்டு வர முடியும்.

புற்றுநோய் போல கருப்புப் பணம் நாட்டின் பொருளாதாரத்தை அரித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தரமான பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை ஏற்படுத்துவது அவசியம். அனைவருக்கும் தரமான சிகிச்சைக் கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சமூகக் கட்டமைப்பும் மிகவும் அவசியம். அரசியல் ஆதாயத்துக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்த வில்லை.
ஏழை, எளிய மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை அனைவரும் வரவேற்க வேண்டும். தொடங்கிய அனைத்துத் திட்டங்களையும் முடிப்பதே மத்திய அரசின் நோக்கம்.
 
கருப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமானியர்களும் பங்கேற்க வேண்டும். ஏழை மக்களுக்கு அனைத்து வசதிகளும் சென்று சேர வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக்யராஜ் செய்த துரோகம்... கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்த சுந்தர்ராஜன்!

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

டி20 உலகக் கோப்பையில் ஹாரி புரூக் படைத்த உலக சாதனை!

நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!

மக்கள் அஞ்சலிக்காக சென்னை தி. நகர் இந்திய கம்யூ. அலுவலகத்தில் நல்லகண்ணு உடல் வைக்கப்படுகிறது!

SCROLL FOR NEXT