முகப்பு
இந்தியா

அனைவரும் வாரீர்: இந்திய மக்களுக்கு நரேந்திர மோடி விடுத்துள்ள அழைப்பு

தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Updated On : 1 அக்டோபர், 2016 at 12:19 PM
பகிர்:


புது தில்லி: தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு அக்டோபர் 2ம் தேதியோடு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அனைவரும் தூய்மைப் பணியில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வாருங்கள்.

தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து நீங்கள் தூய்மை செய்யும் படங்களை 'நரேந்திர மோடி செயலி'யில் அப்டேட் செய்து, மற்றவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.