முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல்பூரி

சேலம் மாவட்டம், தேவூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 4:18 AM
பகிர்:

கண்டது

(சேலம் மாவட்டம், தேவூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

கோணகழுத்தானூர்'

Advertisement

மு.அ.முத்து, எடப்பாடி.

(விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

ஒரு கோடி'

நெ.இராமகிருஷ்ணன், சென்னை74.

(சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனம் ஒன்றில் எழுதியிருந்தது)

இழந்த செல்வத்தை மீட்டுத் தர காகம், நாய் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உங்களால் முடிந்தவரையில் உணவு அளிப்பதே சிறந்த வழி!'

எஸ்.செல்வம், ஈரோடு.

கேட்டது

(திருச்சி பூங்காவில் இருவர்)

பசங்களுக்கு லீவு விட்டாச்சே... எப்படிச் சமாளிக்கப் போறே?'

அவங்களை வீட்டில் விட்டு நான் இங்கே நிம்மதியா வந்திடுவேன்.'

அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(திருமருகல் பேருந்து நிலையத்தில் தம்பதி...)

ஆபிஸ் போனுக்கு பேசாதேன்னு உனக்கு

எத்தனை முறை சொல்லியிருக்கேன்டி...'

செல்போனில் பேசினா நீங்க எங்கே இருக்கீங்கன்ற உண்மையைத் தெரிஞ்சுக்க முடியாது...'

எம்.ரவீந்திரன், திருமருகல்.

(விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)

நீ ஏன் செல்போன் நம்பரை யாருக்கும் கொடுக்கறதில்லை?'

அடிக்கடி கடன் கேட்டு தொல்லை பண்றாங்க... ஆமா, நீ ஏன் திடீர்னு என்னைப் பார்க்க இப்போ வந்தே?'

உன்னிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிட்டுப் போகலாமுன்னு வந்தேன்.'

கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

யோசிக்கிறாங்கப்பா!

வடையில் ஆயில் இருக்கிறது. அதுபோல், நம் நடையில் ஆயுள் இருக்கிறது.

சாத்தை மயில், நெல்லை.

மைக்ரோ கதை

அந்தக் கிராமத்து பேருந்து நிறுத்தத்தில் நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்தக் காலத்துல ஒரு பவுன் தங்க நகை ஐந்நூறு ரூபாய்க்கு வித்துச்சு. அப்பவே ஐம்பதோ, நூறோ பவுன் வாங்கிப் போட்டிருக்கலாம். நான் ஏமாந்துட்டேன்...' என்று ஒருவர் கூறினார்.

உடனே மற்றொருவர், நானும் அப்படியே... பத்து ஏக்கர் நிலம் ஐந்து லட்சம் ரூபாய்க்கே விலைக்கு வந்துச்சு... நானும் வாங்காம ஏமாந்துட்டேன்' என்று நொந்துகொண்டார்.

இந்த உரையாடலைக் கேட்ட அங்கிருந்த விவசாயி, ஐயா, நீங்க பேசுறதைக் கேட்டேன். ஆனா, முடிஞ்ச கல்யாணத்துக்கு மேளம் அடிக்கிறதாலே என்ன பயன்?' என்றார்.

இதைக் கேட்ட நண்பர்கள் திகைத்து நின்றனர்.

ஜே.சு.ராஜா, புளியங்குடி.

எஸ்.எம்.எஸ்.

நம் தீர்மானங்கள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன.

த.சீ.பாலு, அத்திப்பட்டு.

அப்படீங்களா!

சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களைக் கவர விளம்பரங்களைப் போன்று குறுகிய நேரத்தில் காண்பதற்கான குறு விடியோக்கள் (ஷார்ட்ஸ்) உருவாக்கப்பட்டன.

இந்த குறு விடியோக்களின் மோகம் வேகமாக அதிகரித்து பயன்பாட்டாளர்களை மணிக்கணக்கில் அறிதிறன்பேசிகளைக் காணும் அடிமையாக்கி விட்டது.

ஷார்ட்ஸ் மோகத்தில் சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரையில் சிக்கி உள்ளனர். பெற்றோர்கள் கைகளில் இருந்து அறிதிறன்பேசிகளைப் பெற்றதும் பிள்ளைகள் பார்ப்பது இந்த சிறு விடியோக்களைத்தான்.

நேரமும், சிறு விடியோக்களின் எண்ணிக்கையும் கடப்பது தெரியாமல் கண் இமைக்காமல் பார்ப்பதால் அவர்களின் உடல்நலம் மட்டுமல்ல, நடவடிக்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்தப் பிரச்னைக்கு தீர்வுகாண முன்பு யூடியூப் முன்பு 15 நிமிஷங்கள் வரையில் ஷார்ட் விடியோக்களைப் பயன்படுத்த சுய கட்டுப்பாடு விதிக்கும் சேவையை அறிமுகம் செய்திருந்தது. தற்போது யூடியூப் ஷார்ட் விடியோக்களைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்க்கும் சேவை அறிமுகமாகி உள்ளது.

இதைச் செயல்படுத்த யூடியூப் செட்டிங்ஸில் டைம் மேனஜ்மென்ட் டெய்லி லிமிட்ஸ் ஷார்ட் பீட் லிமிட் ஜீரோ மினிட்ஸ் என்பதை தேர்வு செய்தால் போதும். ஷார்ட் விடியோக்கள் உங்கள் யூடியூப் கணக்கில் வெளியாவது நிறுத்தப்படும். எனினும், உங்களின் தேடுதல் மற்றும் சந்தாதாரர் பக்கங்களில் இந்த ஷார்ட் விடியோக்கள் வெளியாகும்.

ஷார்ட் விடியோக்களுக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மெல்ல மெல்ல விடுபட இந்தச் சேவை பயன்படும் என்றே எதிர்பார்க்கலாம்.

அ.சர்ப்ராஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.