எல்லையில் பதட்டம்: பிரணாப் முகர்ஜியுடன் ஆலோசனை நடத்திய மோடி!
இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பதட்டமான சூழல் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் பதட்டமான சூழல் காரணமாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கடந்த மாதம் 18-ந் தேதி பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நுழைந்து நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக
பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதில் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 38 பயங்கரவாதிகளும், 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர்.
Advertisement
இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள பஞ்சம் மாநில கிராமபபகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக ஆலோசிப்பதற்காக குடியரசு தலைவர் மாளிகையில் பிரணாப் முகர்ஜியை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.