இந்தியா

விவகாரத்து வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருமணமான பெண், எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், நீண்ட நாட்களுக்கு தாம்பத்தியத்தை மறுப்பதை காரணமாகக் கொண்டு விவகாரத்து வழங்கலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

PTI


புது தில்லி: திருமணமான பெண், எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், நீண்ட நாட்களுக்கு தாம்பத்தியத்தை மறுப்பதை காரணமாகக் கொண்டு விவகாரத்து வழங்கலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கல் செய்த விவகாரத்து மனுவில், எந்தவிதமான நோயும் இல்லாமல், நல்லபடியாக இருக்கும் தனது மனைவி, கடந்த நான்கரை ஆண்டுகளாக தாம்பத்தியத்துக்கு மறுப்பு தெரிவித்து தனக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார் என்றும், எனவே, தனக்கு விவகாரத்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

விசாரணையின் போது, கணவரின் இந்த குற்றச்சாட்டை மனைவி மறுக்காத நிலையில், கணவரின் கோரிக்கையை ஏற்று தில்லி உயர் நீதிமன்றம் விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், எந்த காரணமும் இல்லாமல், நோயும் இல்லாமல், மனைவி தனது கணவருடன் தாம்பத்தியத்தை மறுப்பதால், ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து கணவர் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையின் இறுதியில் விவகாரத்து கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதனை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்து விவகாரத்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஓர் அரசியல் இயந்திரம்; அதிமுக, தவெகவை புறக்கணிக்க முடியாது: காங்கிரஸ் எம்.பி.

மீண்டும் தொடர் போராட்டத்தில் அண்ணாமலை பல்கலை ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர்!

நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்

SCROLL FOR NEXT