இந்தியா

சிறுமி பாலியல் வழக்கு: ஆர்ஜேடி எம்எல்ஏ-வை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு

DIN

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ராஷ்ட்ரீய ஜனதா தளத்திலிருந்து (ஆர்ஜேடி) இடைநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ராஜ் வல்லப யாதவை மீண்டும் சிறையில் அடைக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
ஆர்ஜேடி எம்எல்ஏ-வான ராஜ் வல்லப யாதவ், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ராஜ் வல்லப யாதவ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த பாட்னா உயர் நீதிமன்றம், பிணையில் வெளியே வர அவருக்கு அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
ராஜ் வல்லப யாதவ் வெளியே இருந்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அச்சுறுத்தல் வர வாய்ப்புள்ளது என்றும், அதனால் அவரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியாது என்றும் பிகார் மாநில காவல்துறை மேல்முறையீட்டு விசாரணையின்போது தெரிவித்தது.
இதற்கு நடுவே, சம்பந்தப்பட்ட சிறுமியின் வாக்குமூல நடைமுறைகள் நிறைவடையும் வரை வெளியூரில் தாம் தங்கியிருக்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் ராஜ் வல்லப யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அதைப் பரிசீலித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் இருந்து வாக்குமூலம் பெறும் வரை ராஜ் வல்லப யாதவ் சிறையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் படத்தின் டிரெய்லர்

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

SCROLL FOR NEXT