கிணற்றுக்குள் பாய்ந்த பேருந்து: ராஜஸ்தான் விபத்தில் மூவர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர்.
இந்தியாகிணற்றுக்குள் பாய்ந்த பேருந்து: ராஜஸ்தான் விபத்தில் மூவர் பலி!
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர்.
கோட்டா: ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்து ஒன்று கிணற்றில் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலியானார்கள். 16 பேர் காயமடைந்தனர்.
பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 19 பேர் ராஜஸ்தானில் உள்ள மனோஹர்தனா நகரத்திற்கு பேருந்து ஒன்றில் சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்கு தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்வதற்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது.
அவர்கள் பயணம் செய்த பேருந்து ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள பதம்புரா அருகில் வந்து கொண்டிருந்தது. அப்போது வளைவு ஒன்றில் பேருந்து திரும்பிய பொழுது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள வயலோர கிணற்றின் சுவரை இடித்துக்கொண்டே உள்ளே பாய்ந்தது.
இந்த விபத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயரிழந்தனர். மீதமுள்ள 16 பேர் சிரமப்பட்டு கிணற்றில் இருந்து வெளியேறி காயத்துடன் தப்பி விட்டார்கள்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.