இந்தியா

ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலி!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில்,  ராணுவ வீரர் ஒருவர் பலியானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

DIN

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  ராணுவ வீரர் ஒருவர் பலியானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய கிராமங்கள் பூஞ்ச் மற்றும் ராஜோரி ஆகும். இங்குள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார்.  இதேபோல் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலினால்  பொதுமக்களில் இரண்டு பெண்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 3,000 பொங்கல் பரிசு! ஆனால்...

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ.90.16ஆக நிறைவு!

விஜய்யிடம் சிபிஐ விசாரணை நிறைவு!

SCROLL FOR NEXT