முகப்பு
இந்தியா

அமிதாப் பச்சன் , அமீர்கான் இணையும் முதல் ஹிந்திப் படம்: இது பாலிவுட் திருவிழா!

ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான அமிதப்பச்சன் , அமீர்கான் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க போகும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Dinamani
Updated On : 24 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ஹிந்தி திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான அமிதப்பச்சன் , அமீர்கான் ஆகிய இருவரும் சேர்ந்து நடிக்க போகும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய திரைப்பட உலகின் முடிசூடா மன்னனாகவும், இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவராகவும் விளங்குபவர் அமிதாப் பச்சன். அதேபோல் அவருக்கு அடுத்த படியாக சிறந்த நடிகராக விளங்கி வருபவர் அமீர்கான். இருவரும் தத்தமது அளவில் புகழ்  பெற்று விளங்குபவர்கள்.

இந்நிலையில் இவர்களிருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் புதிய ஹிந்திப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தபடத்தை முன்னணி நிறுவனமான  யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

அமீர் நடித்த தூம்-3 ஹிந்திப்படத்தை எழுதி இயக்கிய விக்டர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் அமீர்கான், 'இறுதியாக நான் இவ்வளவு நாள் காத்திருந்த தருணம் வந்துவிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஒரு நடிகருடன் நடிக்கும் நாளை பரபரப்புடன் எதிர்நோக்கியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில்படப்பிடிப்பு துவங்க உள்ள இந்தப்படம், 2018-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →