போபால் : மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹான், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகத்தை காப்பியடிக்க திட்டமிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரூ.10க்கு சத்தான உணவை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு முழு உணவை தாளி என்று கூறுவார்கள். அந்த வகையில் ஒரு ரொட்டி, பருப்பு, காய், சாதம், ஊறுகாய் அடங்கிய ஒரு தாளி ரூ.10க்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அம்மா உணவகம் போல ஆகார் யோஜ்னா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.