இந்தியா

ஜைன துறவிகளுடன் பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டத் தலைவர் சந்திப்பு

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல்...

DIN

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கும் பலூசிஸ்தான் மாகாணத்திலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியமான அரசியல் தலைவர், உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் ஜைன மதத் துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
பலூசிஸ்தான் விடுதலைக்காக போராடி வருபவர் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச். உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வந்த அவர், அங்குள்ள ஜைன துறவிகளை சந்தித்து ஆசி பெற்றார்.
இந்தியவில் ஆய்வுக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் அமித் ராய் ஜெயினும் அவருடன் இருந்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் மீர் மஸ்தாக் தில்ஷத் பலூச் கூறுகையில், "பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெறும் முகம் மட்டுமே. பாகிஸ்தான் அரசை ராணுவமே நடத்தி வருகிறது' என்றார்.
அமித் ராய் கூறுகையில், "தாங்கள் பலூசிஸ்தானில் படும் கஷ்டங்களையும், எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் ஜைன துறவிகளிடம் பலூச் எடுத்துரைத்தார். பலூசிஸ்தான் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற ஜைன துறவி ஆசார்ய சுபத்ர முனிஜி மகராஜிடம் ஆசி பெற்றுச் சென்றார்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வாட்ஸ்ஆப், டெலிகிராம்தான் டார்கெட்! 30,000 பேரிடம் ரூ. 1,500 கோடி மோசடி! எந்த நகரம் முதலிடம்?

உத்தரகண்ட் கனமழை: இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 பேரின் சடலங்கள் மீட்பு

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறியது இவர்தான்!

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT